/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதை மின் ஊழியர் மீது புகார்: அதிகாரிகளை கண்டித்து போராட்டம்?
/
போதை மின் ஊழியர் மீது புகார்: அதிகாரிகளை கண்டித்து போராட்டம்?
போதை மின் ஊழியர் மீது புகார்: அதிகாரிகளை கண்டித்து போராட்டம்?
போதை மின் ஊழியர் மீது புகார்: அதிகாரிகளை கண்டித்து போராட்டம்?
ADDED : ஏப் 23, 2024 04:08 AM
செங்குன்றம் : செங்குன்றம், காமராஜ் நகரில், தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது. அதில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையைச் சேர்ந்த ரகு, 54, என்பவர் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 20ம் தேதி இரவு பணியில் இருந்தபோது, பாடியநல்லுாரைச் சேர்ந்த நுகர்வோர், மின் இணைப்பு துண்டிப்பு தொடர்பாக, அலுவலக தொலைபேசியில் புகார் செய்துள்ளார். ஆனால், மது போதையில் இருந்த ரகு, அதை அலட்சியப்படுத்தி இருக்கிறார்.
அதன்பின், அந்த புகார் செங்குன்றம் மின் வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், ஆவடி மண்டல நிர்வாக செயற்பொறியாளர் சவுந்தரராஜன் ஆகியோருக்கு சென்றது.
அவர்களின் உத்தரவை அலட்சியப்படுத்திய ரகு, அதிகாரிகளிடம் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
சவுந்தரராஜன் உத்தரவின்படி, விஜயகுமார், செங்குன்றம் போலீசில் புகார் செய்திருக்கிறார். அங்கு விசாரணைக்கு சென்ற போலீசாரிடமும் அலட்சியமாக பேசியிருக்கிறார். அப்போது போலீசார், அவரை அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்னைக்கு, தங்களது அதிகாரிகள் தான் காரணம் என, அவர்களை கண்டித்து, ரகுவிற்கு ஆதரவாக, நேற்று காலை, மின் வாரிய அலுவலகம் முன் போராட்டம் செய்ய, மின்வாரிய ஊழியர்கள் ஒன்று கூடினர்.
அப்போது, உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், அவர்களிடம் பேச்சு நடத்தினார். அதன் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

