
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரை உதிர்ந்தமின் கம்பம்
வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துார் ஊராட்சி, குளக்கரை சாலை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு மின்கம்பத்தில் சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால், மின்கம்பம் வலுவிழந்த நிலையில் உள்ளது.
பலத்த காற்றடித்தால், மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
- என்.குமார்,
வாலாஜாபாத்.