நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : திருநின்றவூர், முருகேசன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 33. இவர், திருநின்றவூர் காந்தி சிலை அருகே எஸ்.ஆர்.பி., ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஸ்டோர் ரூமில் பதுக்கி வைத்திருந்த 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 98 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, ராஜேஷ்குமாரை கைது செய்த திருநின்றவூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.