/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் பஜார் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நெரிசல்
/
உத்திரமேரூர் பஜார் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நெரிசல்
உத்திரமேரூர் பஜார் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நெரிசல்
உத்திரமேரூர் பஜார் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நெரிசல்
ADDED : ஜூன் 29, 2024 11:07 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், 40,000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சுற்றி உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவ - மாணவியர், உத்திரமேரூர் வந்து தான், பேருந்து பிடித்து, பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதனால், உத்திரமேரூர், பஜார் சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அதிகரித்து, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை போக்க துவங்கப்பட்ட உத்திரமேரூர் புற வழிசாலை திட்டமும், நிர்வாக சீர்கேடு காரணமாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் போக்கு வரத்து நெரிசல் போக்கதீவிர நடவடிக்கையாக,சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், கட்டடங்கள் அகற் றும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்தது.
ஆனால், அப்பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் தொடர்வதாக, பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.
உத்திரமேரூர் சாலையில், அம்பேத்கர் சிலையில் இருந்து, பேருந்து நிலையம் வரை மட்டுமே, சாலையோர ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மற்றும்கடைகள் அகற்றப்பட்டன.
ஆனால், பஜார் வீதியில் இருந்து, வட்டாட்சியர் அலுவலகம் வரையிலான சாலை பகுதியில் தான் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
அப்பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி, போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.