/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளக்கொளி பெருமாள் கோவிலில் 32 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை
/
விளக்கொளி பெருமாள் கோவிலில் 32 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை
விளக்கொளி பெருமாள் கோவிலில் 32 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை
விளக்கொளி பெருமாள் கோவிலில் 32 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை
ADDED : மார் 25, 2024 11:24 PM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில், சட்டமன்ற அறிவிப்பு 2022- - 23ன்படி, 1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் திருப்பணியின் கீழ் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.
இதில், ஒரு பகுதியாக விளக்கொளி பெருமாள் கோவிலில் 18 லட்சம் ரூபாய் செலவில் 32 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் செய்யப்பட்டு நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இவ்விழாவில், ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி, துணை ஆணையர் நகை சரி பார்ப்பு அலுவலர் ஜெயா, கோவில் செயல் அலுவலர் பூவழகி, கோவில் அர்ச்சர்கள், உபயதாரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.