/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் கட்டட கழிவுகள் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
சாலையோரம் கட்டட கழிவுகள் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
சாலையோரம் கட்டட கழிவுகள் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
சாலையோரம் கட்டட கழிவுகள் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஆக 20, 2024 11:00 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட கே.எம்.அவென்யூ விரிவு பகுதி மற்றும் ஸ்ரீரங்கராஜ வீதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
சின்ன காஞ்சிபுரம் வேகவதி தெருவில் இருந்து இப்பகுதிக்கு செல்லும் பிரதான சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக கட்டட கழிவுகள், தேங்காய் மட்டைகள் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
மின்விளக்கு வசதி இல்லாததால், கே.எம்., அவென்யூவிற்கு செல்வோர் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, வேகவதி தெருவில் இருந்து கே.எம்., அவென்யூ பகுதிக்கு செல்லும் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளையும், தேங்காய் மட்டை உள்ளிட்ட குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 'கே.எம்.அவென்யூ விரிவு பகுதியில் உள்ள சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளையும், பிற குப்பையையும் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.