/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து புதிய வீடு வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி நிர்வாகம்

ADDED : ஜூலை 06, 2024 12:23 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, மேட்டுத்தெருவில், மஞ்சள் நீர் கால்வாயின் கிளை கால்வாய் செல்கிறது. இக்கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மஞ்சள் நீர் கால்வாயில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இக்கால்வாயின் பெரும்பகுதியை, அங்குள்ள ஸ்வீட் கடை நடத்தும் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார்.
இந்நிலையில், மேட்டுத்தெருவின் மறுபுறம் உள்ள கால்வாயில், புதிதாக கான்கிரீட் வீடு ஒன்றை ஆக்கிரமிப்பாளர் ஒருவர் வேகமாகக் கட்டி வருகிறார்.
கால்வாயின் மத்தியிலேயே ஆக்கிரமித்து கட்டுவதால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி, மேட்டுத்தெருவில் வழிந்தோடும் நிலை ஏற்படும்.
நீர்நிலைகளில் எந்தவிதமான ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது.
இருப்பினும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், வருவாய்த் துறை மெத்தனம் காட்டி வருகிறது.
மேட்டுத்தெருவில் புதிதாக முளைக்கும் கான்கிரீட் ஆக்கிரமிப்பை, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்த்து வருகிறது.
இவ்வாறு கூறினர்.