/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி நடுநிலைப் பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசை
/
மாநகராட்சி நடுநிலைப் பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசை
மாநகராட்சி நடுநிலைப் பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசை
மாநகராட்சி நடுநிலைப் பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசை
ADDED : மார் 03, 2025 12:31 AM
காஞ்சிபுரம், ஞ்சிபுரம் ஒலிமுஹமதுபேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் நுாற்றாண்டு விழா மற்றும்ஆண்டு விழா நேற்று விமரிசயைாக நடந்தது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எழில், வட்டார கல்வி அலுவலர் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதில், முன்னாள் மாணவ- - மாணவியர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
இப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும், முன்னாள் மாணவர்களையும் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
தொடர்ந்து, பள்ளி மாணவ- - மாணவியரின் கலை நிகழ்ச்சி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதில், பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார். ஆசிரியர் கலீல்பாட்ஷா நன்றி கூறினார்.