/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய எல்.இ.டி., விளக்குகள் பொருத்துவதில் சொதப்பல்: ரூ.12 கோடி செலவிட்டும் எரியல ரூ.12 கோடி செலவிட்டும் சரிவர எரியல

ADDED : செப் 11, 2024 12:25 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் பயன்பாட்டில் இருந்த, 12,000 குழல் விளக்குகளை அகற்றிவிட்டு, நகரில் உள்ள 51 வார்டுகளுக்கும், 12 கோடி ரூபாய் செலவில், புதிய எல்.இ.டி., விளக்குகள் கடந்தாண்டு பொருத்தப்பட்டது.
குற்றச்சாட்டு
நகரின் இடங்களுக்கு ஏற்ற வகையில், 10, 60, 120 வாட்ஸ் என, நகரின் இடங்களுக்கு ஏற்ற வகையில், இந்த எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
முக்கிய வீதிகளிலும், நான்கு முனை சந்திப்புகளிலும் அதிக வாட்ஸ் கொண்ட பெரிய எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு ஒரு ஆண்டு மட்டுமே ஆன நிலையில், நகரின் பல இடங்களில் சரிவர எரிவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கழுநீரோடை வீதி, கிருஷ்ணன் தெரு, விளக்கடி கோவில் தெரு போன்ற தெருக்களில் பல விளக்குகள் இரவு முழுதும் எரியாமல் உள்ளது.
எல்.இ.டி., விளக்குகளை பராமரிக்கும் பணி தனியார் நிறுவனம் கண்காணிக்கிறது. இருப்பினும், பல இடங்களில் சரிவர எரிவதில்லை.
லஞ்ச ஒழிப்பு
புதிதாக பொருத்தப்பட்ட எல்.இ.டி., விளக்குகள் முறையாக எரிய, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எல்.இ.டி., விளக்குகள் சரிவர எரியவில்லை எனவும், அதில் முறைகேடு நடந்தாக ஏற்கனவே அ.தி.மு.க., கவுன்சிலர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை யிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.