/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் அருகே மாடுகள் உலா: பக்தர்கள் அச்சம்
/
கோவில் அருகே மாடுகள் உலா: பக்தர்கள் அச்சம்
ADDED : ஆக 09, 2024 10:04 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றியுள்ள மாட வீதி, பஞ்சுபேட்டை, கருப்படிதட்டடை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் பிரதான ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தை ஒட்டியுள்ள சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் மாடுகள் வளர்ப்போர், தங்களது மாடுகளை வீட்டு கொட்டகையில் கட்டிவைத்து, பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.
உணவுக்காக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், ஏகாம்பரநாதர் கோவில் 16 கால் மண்டபம் பகுதியில் உலாவுகின்றன. மேலும், சாலையை மறித்து படுத்துக்கொண்டும், நின்று கொண்டு இருக்கின்றன.
வாகனங்கள் வரும்போது, ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டு திடீரென குறுக்கும், நெடுக்குமாக மிரண்டு ஓடும் மாடுகளால், வாகன ஓட்டிகள், பக்தர்கள், விபத்தில் சிக்கும் அபாயம்உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகவும், பக்தர்களை அச்சுறுத்தும் வகையில், ஏகாம்பரநாதர் கோவில் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்வதோடு, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

