/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளரிக்காய் கிலோ ரூ.80 காஞ்சியில் சீசன் துவக்கம்
/
வெள்ளரிக்காய் கிலோ ரூ.80 காஞ்சியில் சீசன் துவக்கம்
வெள்ளரிக்காய் கிலோ ரூ.80 காஞ்சியில் சீசன் துவக்கம்
வெள்ளரிக்காய் கிலோ ரூ.80 காஞ்சியில் சீசன் துவக்கம்
ADDED : மார் 02, 2025 12:30 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில், சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலில் நடமாடுவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், கோடை வெயிலுக்கு உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் இளநீர், தர்பூசணி உள்ளிட்ட வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில்,காஞ்சி புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்படும் வெள்ளரிக்காய் சீசன் துவங்கியுள்ளதால், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெள்ளரிக்காய் வியாபாரி ஆர்.மீரா கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் தற்போதுதான் வெள்ளரிக்காய் சீசன் துவங்கியுள்ளது. இதனால், கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறேன்.
கடந்த ஆண்டு கோடையில், அதிகபட்சமாக கிலோ வெள்ளரிக்காய் 120 ரூபாய் வரை விற்பனையானது. விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரித்தால், ஒன்றரை மாதத்தில் விலை மேலும் குறைந்து, கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகும்.
காஞ்சிபுரத்தில் மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பல்வேறு மருத்துவ குணமும், நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காயை பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.