/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்து திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய் தளம்
/
சேதமடைந்து திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய் தளம்
சேதமடைந்து திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய் தளம்
சேதமடைந்து திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய் தளம்
ADDED : செப் 02, 2024 10:20 PM

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், அரசமரம் தெருவில் சாலையோரம் கான்கிரீட்தளத்துடன் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. சாலையின் தரைமட்டத்தில் உள்ள இக்கால்வாய் தளம்மூன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் சேதமடைந்து திறந்து கிடக்கிறது.
இதனால், அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, திறந்து கிடக்கும் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம்உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், அரசமரம் தெருவில், தளம் சேதமடைந்து திறந்து கிடக்கும் மழைநீர்வடிகால்வாய் மீது சிமென்ட் சிலாப் போட்டு மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.