/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைப்பு
/
குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைப்பு
ADDED : ஆக 14, 2024 10:45 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை செல்லும் வாகனங்கள், ஜவஹர்லால் நேரு சாலை, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன.
மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள ஜவஹர்லால் நேரு சாலையில், இரு மாதங்களுக்கு முன், நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. இதனால், அப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பள்ளம் தோண்டி, குழாய் உடைப்பை சீரமைத்தனர்.
ஆனால், பள்ளம் தோண்டிய இடத்தையும், குடிநீர் வெளியேறியதால் மண் அரிப்பால் சேதமடைந்த சாலையையும், மாநகராட்சி நிர்வாகம் முறையாக தார் ஊற்றி சாலையை சீரமைக்கவில்லை.
இதனால், சாலை சேதமடைந்த பகுதியில், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினர்.
இதனால், சேதமடைந்த சாலையை, தார் ஊற்றிசீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், குடிநீர் குழாய் சீரமைப்புக்காக, மாநகராட்சி ஊழியர்கள் சேதப்படுத்திய சாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று தார் ஊற்றிசீரமைத்தனர்.