/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சர்வீஸ் சாலையால் அபாயம்
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சர்வீஸ் சாலையால் அபாயம்
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சர்வீஸ் சாலையால் அபாயம்
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சர்வீஸ் சாலையால் அபாயம்
ADDED : செப் 07, 2024 06:57 AM

ஸ்ரீபெரும்புதுார் : திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வரும் கன்டெய்னர் லாரிகள், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் உள்ளமாத்துார், வல்லக்கோட்டை, வல்லம், ஒரகடம், போந்துார் உள்ளிட்ட பகுதிகளின் சர்வீஸ்சாலையில் நிறுத்துகின்றனர்.
இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு, இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் மோதி விபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாகி உள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தப்படும் கன்டெய்னர் லாரிகளில், சட்டவிரோத செயல்களும் நடக்கின்றன.மேலும், குட்கா பொருட்களை கடத்தி வந்து,ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் சப்ளை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
எனவே, சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும்கன்டெய்னர் லாரிகளை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.