/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழ்வாக செல்லும் மின் ஒயரால் பென்னலுாரில் விபத்து அபாயம்
/
தாழ்வாக செல்லும் மின் ஒயரால் பென்னலுாரில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின் ஒயரால் பென்னலுாரில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின் ஒயரால் பென்னலுாரில் விபத்து அபாயம்
ADDED : மார் 07, 2025 12:49 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் பென்னலுார் ஊராட்சி உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையை இணைக்கும், பென்னலுார் பிரதான சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம் மின் கம்பங்களின் வழியே செல்லும் மின் ஒயர், பென்னலுார் பிள்ளையார் கோவில் அருகே, மிகவும் தாழ்வாக கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளது.
இதனால், தனியார் பள்ளி, கல்லுாரி பேருந்துகள் அதிகம் செல்லும் இந்த சாலையில், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, மின் ஒயரில் உரசி மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், தாழ்வாக செல்லும் மின் ஒயரை, உயர்த்தி அமைக்க, மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.