/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குண்ணம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
குண்ணம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
குண்ணம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
குண்ணம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : ஆக 12, 2024 10:22 PM

ஸ்ரீபெரும்புதுார் : சுங்குவார்சத்திரத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லவும், சுங்கு வார்சத்திரம் -- குண்ணம் சாலையில் தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள், கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன.
இது மட்டுமின்றி, தொழிலாளர்களை அழைத்துச் செல்ல, தினமும் நுாற்றுக்கணக்கான தனியார் தொழிற்சாலை பேருந்துகள், வேன்களும் வந்து செல்கின்றன.
இந்த நிலையில்,அப்பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்துகள், போக்குவரத்து மிகுந்த இந்த சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இதனால், பின்னால் வரும் மற்ற வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிற்கும் வாகனங்களின் மீது மோதி, அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.