/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வர்ணம் அடிக்காத வேகத்தடை திம்மசமுத்திரம் சாலையில் அபாயம்
/
வர்ணம் அடிக்காத வேகத்தடை திம்மசமுத்திரம் சாலையில் அபாயம்
வர்ணம் அடிக்காத வேகத்தடை திம்மசமுத்திரம் சாலையில் அபாயம்
வர்ணம் அடிக்காத வேகத்தடை திம்மசமுத்திரம் சாலையில் அபாயம்
ADDED : ஜூலை 04, 2024 09:13 PM

திம்மசமுத்திரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, திம்மசமுத்திரம் ரயில்வே கடவுப்பாதை அருகில் இருந்து, திம்மசமுத்திரம் கிராமம் வழியாக சாலையில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதியில் வாகன விபத்து ஏற்படுவதை தடுக்க, இரு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமலும், இரவில் ஒளிரும் வகையில் ஒளிபிரதிபலிப்பான் ஒட்டப்படாமலும் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.