/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெடி மருந்தை கடித்த பசு உயிரிழப்பு; இருவர் கைது
/
வெடி மருந்தை கடித்த பசு உயிரிழப்பு; இருவர் கைது
ADDED : ஏப் 02, 2024 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் அடுத்த மேட்டுகாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 53; விவசாயி.
இவருக்கு சொந்தமான மாடு ஒன்று, கடந்த மாதம் 5ம் தேதி, மேய்ச்சலுக்கு சென்றபோது, பன்றியை கொல்லும் வெடி மருந்தை கடித்ததில் வாய் கிழிந்து உயிரிழந்தது.
இது குறித்து, ஜானகிராமன், சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார்வழக்கு பதிந்து, காஞ்சிபுரம், சின்னயன்சத்திரத்தைச் சேர்ந்த லட்சுமணன், 27, மோகன், 37, ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

