/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாட்டிற்கு வராத 1,300 வீடுகள் திறப்பு விழா முடிந்தும் ஒப்படைப்பு தாமதம்
/
பயன்பாட்டிற்கு வராத 1,300 வீடுகள் திறப்பு விழா முடிந்தும் ஒப்படைப்பு தாமதம்
பயன்பாட்டிற்கு வராத 1,300 வீடுகள் திறப்பு விழா முடிந்தும் ஒப்படைப்பு தாமதம்
பயன்பாட்டிற்கு வராத 1,300 வீடுகள் திறப்பு விழா முடிந்தும் ஒப்படைப்பு தாமதம்
ADDED : ஏப் 10, 2024 10:04 PM
சென்னை:சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட, 1,300 வீடுகள், திறப்பு விழா முடிந்தும் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்படாமல் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
வீட்டுவசதி வாரியம் சார்பில், மாநிலம் முழுதும் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இதில் பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்காக வாடகை குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சென்னையில், 20 இடங்களில் வாடகை குடியிருப்புகள் இருந்தன.
இவற்றை இடித்துவிட்டு, புதிதாக கட்டும் திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தியது. இந்த வகையில், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில், 452 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,891 வீடுகள் கட்டும் திட்டத்தை வீட்டுவசதி வாரியம் துவக்கியது.
இதில், 1,300 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின், இவற்றை திறந்து வைத்தார்.
இங்கு வீடுகள் பெற, துறை வாரியாக அரசு ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை பெற்றது.
இதில் தங்களுக்கும் வீடு வேண்டும் என, இடமாறுதல் இல்லாத தலைமைச் செயலக ஊழியர்களும் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், தகுதியான அரசு ஊழியர்களை தேர்வு செய்யும் பணிகள் முடிந்துள்ளதாக, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், திறப்பு விழா நடத்தி பல மாதங்கள் ஆன நிலையில், 1,300 வீடுகள் இன்னும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.
வாரிய அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என, ஒதுக்கீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதை காரணமாகக் கூறி, வீடு ஒப்படைப்பை அதிகாரிகள் தாமதப்படுத்துவதாக, ஒதுக்கீட்டாளர்கள் புகார் கூறுகின்றனர்.

