/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மகேந்திரவாடி ஏரிநீர் வரத்து கால்வாயில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

ADDED : மே 14, 2024 09:39 PM

மகேந்திரவாடி:காஞ்சிபுரம் அடுத்த, ராணிப்பேட்டை மாவட்டம், மகேந்திராவடி கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரி நீரை பயன்படுத்தி, விவசாயிகள் இரு பருவம் நெல் சாகுபடி செய்து வருகின்றனனர். இந்த ஏரிக்கரை மீது, நெமிலி - பாணவாரம் சாலை உள்ளது.
இந்த சாலை குறுக்கே, மகேந்திரவாடி ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாய் செல்கிறது. மழைக்காலத்தில், கால்வாயில் அதிகமாக தண்ணீர் வெளியேறும் போது, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
இதை தவிர்க்க, மகேந்திரவாடி ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாய் குறுக்கே, உயர் மட்ட தரைப்பாலம் கட்டித் தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.