/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கம் ஏரியை தூர்வார கோரிக்கை
/
சாலவாக்கம் ஏரியை தூர்வார கோரிக்கை
ADDED : மே 03, 2024 12:47 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 280 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. பருவ மழை காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு, அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
இந்த ஏரி, பல ஆண்டுகளாக தூர்வாராததால்,ஏரியின் நீர் பிடிப்பு பகுதி தூர்ந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் போதுமான அளவு நீர் சேகரமாகாமல், விரைவாக உபரி நீர் வெளியேறும் நிலை உள்ளது.
ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேகரமாகாததால் ஒரு போகத்திற்கு மட்டுமே இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். எனவே,சாலவாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதியை தூர்வாரி மழைக்காலத்தில் தேவையான நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.