/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுமையிலுாரில் குடிநீர் தட்டுப்பாடு போக்க கோரிக்கை
/
சிறுமையிலுாரில் குடிநீர் தட்டுப்பாடு போக்க கோரிக்கை
சிறுமையிலுாரில் குடிநீர் தட்டுப்பாடு போக்க கோரிக்கை
சிறுமையிலுாரில் குடிநீர் தட்டுப்பாடு போக்க கோரிக்கை
ADDED : ஆக 25, 2024 11:10 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமையிலுார் ஊராட்சியில், சிறுமையிலுார் மற்றும் சித்தாலப்பாக்கம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு ஆழ்துளை கிணறு அமைத்து அதில் உறிஞ்சப்படும் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களாக சிறுமையிலுார் மற்றும் சித்தாலப்பாக்கம் கிராமங்களில் குடிநீர் குழாய்களில் போதுமான அளவிற்கு தண்ணீர் வருவதில்லை என அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும், திருமுக்கூடல் பாலாற்றில் இருந்து, சிறுமையிலுார் வழியாக, படூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு செல்லும் குடிநீர் பைப் வாயிலாக குழாய் அமைத்து இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
எனினும், அந்த குடிநீரும் போதுமானதாக இல்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு தினசரி அவதிப்படுவதாக சிறுமையிலுார் கிராமத்தினர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து சிறுமையிலுார் ஊராட்சி தலைவர் சற்குணம் கூறியதாவது:
சிறுமையிலுார் மற்றும் சித்தாலப்பாக்கம் கிராமங்களுக்கு, ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் வாயிலாக உறிஞ்சும் தண்ணீரை முறையாக வினியோகம் செய்கிறோம். எனினும், மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.
கூடுதல் குடிநீர் தேவைக்காக ஊராட்சி கனிமவள நிதியின் கீழ், குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திடம் ஊராட்சி சார்பில் பரிந்துரை செய்துள்ளோம்.
அதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் குடிநீர் தட்டுப்பாடு போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

