/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் அருகே பழுது பார்ப்பு காஞ்சியில் பக்தர்கள் கடும் அவதி
/
கோவில் அருகே பழுது பார்ப்பு காஞ்சியில் பக்தர்கள் கடும் அவதி
கோவில் அருகே பழுது பார்ப்பு காஞ்சியில் பக்தர்கள் கடும் அவதி
கோவில் அருகே பழுது பார்ப்பு காஞ்சியில் பக்தர்கள் கடும் அவதி
ADDED : ஆக 22, 2024 12:59 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில், முதலாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்ம பல்லவனால், கி.பி., 700 - 728ம் ஆண்டில், 'சான்ட் ஸ்டோன்' எனப்படும், பிண்டிக்கல் வகை மணற்கற்களால் கட்டப்பட்டது.
இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, அதிகளவு வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள பகுதியை ஆக்கிரமித்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பழுது பார்க்கும் இடமாக மாறியுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனம் நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து, பழுது பார்ப்பதற்காக வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற போலீசார், மாநகராட்சி, ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையினரும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், கைலாசநாதர் கோவிலுக்கு வரும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் நீண்ட தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து வரவேண்டிய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் வகையில், கோவில் அருகில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள பழுதுபார்க்கும் வாகனங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.