/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் அருகே வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு
/
கோவில் அருகே வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு
கோவில் அருகே வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு
கோவில் அருகே வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு
ADDED : செப் 09, 2024 05:04 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலுக்குள், ஊரகத்தான் சன்னிதி, காரகத்து பெருமாள், நீரகத்து பெருமாள், கார்வானப் பெருமாள் என, நான்கு திவ்யதேசங்களை இந்த ஒரே கோவிலில் தரிசனம் செய்யலாம்.
இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 28ம் தேதி விமரிசையாக நடந்தது. தற்போது இக்கோவிலில் மண்டலாபிஷேகம் நடைபெறுவதால், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள 'மேன்ஹோல்'வழியாக வெளியேறிய கழிவுநீர் துர்நாற்றத்துடன் சாலையில் வழிந்தோடியது.
இதனால், இக்கோவிலுக்கு மட்டுமல்லாமல் அருகில் உள்ள காமாட்சியம்மன் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் உள்ளிட்ட கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், முகம் சுளித்தபடியே சென்றனர்.
மேலும், வேகமாக சென்ற வாகனங்களால் கழிவுநீர் தெளித்ததால், பாதசாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் வழிந்தோடுவதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.