/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விளக்கு வசதி இல்லை இருளில் தரிசனம் செய்த பக்தர்கள
/
மின்விளக்கு வசதி இல்லை இருளில் தரிசனம் செய்த பக்தர்கள
மின்விளக்கு வசதி இல்லை இருளில் தரிசனம் செய்த பக்தர்கள
மின்விளக்கு வசதி இல்லை இருளில் தரிசனம் செய்த பக்தர்கள
ADDED : பிப் 28, 2025 12:48 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சாலை, பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பிறவாஸ்தானேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. மகா சிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு முழுதும், இக்கோவிலில் சுவாமி தரிசனம் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து சென்றனர்.
ஆனால், கோவில் வளாகத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. கோவிலின் பின்புறம் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இருந்ததால், அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்பட்டது.
இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலை சுற்றிவர சிரமப்பட்டனர். குறிப்பாக கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், முதியோர், இருளில் கோவிலை சுற்றி வர பிறர் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, பிறவாஸ்தானேஸ்வரர் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
* உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுப்பாக்கம் கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத பிரதிகெங்கீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை காட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவில் கி.பி. 11ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த கோவிலில் நேற்று முன்தின இரவு சிவராத்திரி வழிபாடு விமரிசையாக நடந்தது.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது.
தொடர்ந்து, நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதேபோல், எடமச்சி காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், திருப்புலிவனம் அமிர்தகுஜலாம்பாள் சமேத வியாக்ரபுரீஸ்வரர் கோவில், நெய்யாடுபாக்கம் மரகதவல்லி சமேத மருந்தீஸ்வரர் கோவில்,களியாம்பூண்டி சொர்ணாம்பிகை சமேத கனகபுரீஸ்வரர் கோவில், உத்திரமேரூரில் உள்ள கேதாரீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில் ஆகிய இடங்களிலும் சிவராத்திரி வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது.