/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளத்தாஞ்சேரி சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்
/
வளத்தாஞ்சேரி சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம்
ADDED : ஆக 06, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தத்தனுார் ஊராட்சி வழியே, வளத்தாஞ்சேரி -- பேரிஞ்சாம்பாக்கம் செல்லும் பிராதன சாலை செல்கிறது.
இந்த சாலை வழியே, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், வளத்தாஞ்சேரி அருகே, இந்த சாலையில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாகி உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலையோரம் மண் அணைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.