/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலை கழிவுநீரை சாலையில் வெளியேற்றும் அவலம்
/
தொழிற்சாலை கழிவுநீரை சாலையில் வெளியேற்றும் அவலம்
ADDED : ஆக 18, 2024 12:06 AM

ஸ்ரீபெரும்புதுார்:-ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்லும், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் 200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம், ஒரகடத்தில் உள்ள, 'மதர்சன்' என்ற கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீர், சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
ஒரகடம் சிப்காட் அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு அலுவலகங்கள் அருகாமையில் இருந்தும், அதிகாரிகள் மவுனமாக இருந்து வருகின்றனர் என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.