/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி கமிஷனர் மீது கலெக்டரிடம் அதிருப்தி கவுன்சிலர்கள் புகார் மனு
/
மாநகராட்சி கமிஷனர் மீது கலெக்டரிடம் அதிருப்தி கவுன்சிலர்கள் புகார் மனு
மாநகராட்சி கமிஷனர் மீது கலெக்டரிடம் அதிருப்தி கவுன்சிலர்கள் புகார் மனு
மாநகராட்சி கமிஷனர் மீது கலெக்டரிடம் அதிருப்தி கவுன்சிலர்கள் புகார் மனு
ADDED : ஜூலை 06, 2024 12:27 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கும், தி.மு.க., - -அ.தி.மு.க., உள்ளிட்ட அதிருப்தி கவுன்சிலர்களுக்கும் இடையேயான பிரச்னை தொடர்ந்த படி உள்ளது.
ஏற்கனவே, மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, அதிருப்தி கவுன்சிலர்கள் கலெக்டர் கலைச்செல்வி, கமிஷனர் செந்தில்முருகன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், கமிஷனர் செந்தில்முருகன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தாததால், நிலைக்குழு உறுப்பினர்கள் 14 பேர் இதுவரை தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும், மண்டல குழு தலைவர் சந்துரு மீதான ஆதரவை, ஏழு கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் விலக்கிக் கொள்வதாக கடிதம் கொடுத்துள்ளனர்.
இதுபோன்று பல்வேறு நெருக்கடிகளை, மேயர் மகாலட்சுமிக்கு கவுன்சிலர்கள் கொடுத்து வரும் நிலையில், கமிஷனர் செந்தில்முருகன் மீது அதிருப்தி கவுன்சிலர்கள் நேற்று கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்துள்ளனர்.
தி.மு.க.,- - அ.தி.மு.க.,- - காங்., - சுயேச்சை என, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கலைச்செல்வியை சந்தித்தனர்.
அப்போது, 'நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், மேயருக்கு ஆதரவாக கமிஷனர் செயல்படுகிறார்' எனக் கூறி, கலெக்டரிடம் முறையிட்டு மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் கலைச்செல்வி அவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.