/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
/
3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
ADDED : ஆக 24, 2024 12:27 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க நாள், நேற்று செயல்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் கலெக்டர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி இப்பணியை துவக்கி வைத்தார்.
இதன்படி, மாவட்டத்தில் உள்ள 1 - 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 - 30 வயது வரை உள்ள 83,997 பெண்களுக்கு அல்பென்டசோல் என்ற மாத்திரை வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதாரத் துறை, குழந்தை வளர்ச்சி துறை, சமூக நலத் துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை பணியாளர்கள் வாயிலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு முகாம்கள், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விடுபட்ட குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு, வரும் 30ம் தேதி அல்பென்டசோல் மாத்திரை அளிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலுவலகம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்டோவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு வில்லைகளையும் ஒட்டினார்.
இந்நிகழ்வில், இணை இயக்குனர் கோபிநாத், துணை இயக்குனர் செந்தில், முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

