ADDED : ஜூலை 03, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம், ஜூலை 4–
காஞ்சிபுரத்தில் வரும் 8ம் தேதி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடக்கிறது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடக்கிறது.
இதில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., எம்.பி.,– டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் தி.மு.க., எம்.பி., – செல்வம், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
த.வெ.க., ஆட்சி அமைந்த பின் நடக்கும் முதல் கூட்டம் என்பதால், த.வெ.க., எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்க உள்ளனர்.
