/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டுகளை இழுக்க பா.ம.க.,வினர் தீவிர பிரசாரம்
/
தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டுகளை இழுக்க பா.ம.க.,வினர் தீவிர பிரசாரம்
தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டுகளை இழுக்க பா.ம.க.,வினர் தீவிர பிரசாரம்
தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டுகளை இழுக்க பா.ம.க.,வினர் தீவிர பிரசாரம்
ADDED : மார் 29, 2024 09:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - தனி லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளராக, காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் களம் இறங்கியுள்ளார்.
தி.மு.க., வசம் இரண்டு தொகுதி, வி.சி.,யிடம் இரண்டு தொகுதிகள் உள்ளன. மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க., வசம் உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க.,வினர் சரியான ஒத்துழைப்பு மற்றும் கணிசமான ஓட்டுகளை வாங்கி கொடுக்கவில்லை என பேசப்படுகிறது. இதில், கூட்டணி தர்மம் மட்டுமே அ.தி.மு.க., ஆற்றி வந்தது. இருப்பினும், பா.ம.க.,வினர் ஓட்டுகளை பெற்று விட்டனர்.
தற்போது, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரு திராவிட கட்சிகளுடன், பா.ம.க., போட்டியிடாமல், மூன்றாவது அணியான பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில் வாங்கிய ஓட்டுகளை காட்டிலும், இந்த லோக்சபா தேர்தலில் கூடுதல் ஓட்டுகள் பெற வேண்டும் என, ஆர்வம் காட்டி வருகிறது.
இரு திராவிட கட்சிகளில் இருக்கும் பா.ம.க.,வின் ஓட்டுகளை பா.ம.க.,வுக்கு இழுக்க, தொகுதி வாரியாக பா.ம.க.,வினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
மற்றொரு புறம், லோக்சபா தேர்தல் வெற்றியால், தமிழகத்தில் அ.தி.மு.க.,வில் எந்த விதமான நன்மையும் ஏற்பட்டுவிட போவதில்லை என, பா.ம.க.,வினர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

