/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளையாட்டு அரங்கில் நாய்கள் உலா; அச்சத்தில் நடைபயிற்சியாளர்கள்
/
விளையாட்டு அரங்கில் நாய்கள் உலா; அச்சத்தில் நடைபயிற்சியாளர்கள்
விளையாட்டு அரங்கில் நாய்கள் உலா; அச்சத்தில் நடைபயிற்சியாளர்கள்
விளையாட்டு அரங்கில் நாய்கள் உலா; அச்சத்தில் நடைபயிற்சியாளர்கள்
ADDED : ஆக 18, 2024 11:56 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கம் இயங்கி வருகிறது. இங்கு காலை, மாலையில், 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பல்வேறு பிரிவு விளையாட்டு வீரர்கள், வீராங்கனையர் தங்களது விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் 5க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இதனால், நடைபயிற்சி மேற்கொள்வோரும், விளையாட்டு வீரர்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, மாவட்ட விளையாட்டு அரங்கில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.