/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சூழலியல் மாநாட்டு ஆய்வு கோவை நுால்கள் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெளியீடு
/
சூழலியல் மாநாட்டு ஆய்வு கோவை நுால்கள் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெளியீடு
சூழலியல் மாநாட்டு ஆய்வு கோவை நுால்கள் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெளியீடு
சூழலியல் மாநாட்டு ஆய்வு கோவை நுால்கள் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெளியீடு
ADDED : பிப் 27, 2025 12:22 AM

காஞ்சிபுரம்,:காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திரரின், 57வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, 'நிலம், நீர், நிழல்: தமிழிலக்கியங்களில் சூழலியல் மற்றும் தமிழ் இலக்கியங்களில் சூழலியல் மேம்பாட்டு சிந்தனைகள்' என, இரண்டு நுால் வெளியீட்டு விழா, தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலை பல்கலையில் நடந்தது.
இதில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் நுால்களை வெளியிட, தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் முனைவர் வைத்தியசுப்ரமணியன், திருச்சி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் சங்கரராமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, சங்கரா கல்லுாரி சமஸ்கிருதம் துறை, யோகா தினத்தின்போது நடத்திய தேசிய கருத்தரங்கில் வாசிக்க பெற்ற யோகா குறித்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ‛ஸம்ஸ்க்ருதவாங்மயே யோகா' என்ற நுாலை, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெளியிட, சங்கரா கல்லுாரியின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., பெற்றுக் கொண்டார்.
சங்கரா கல்லூரி முதல்வர் முனைவர் கலைராமன் வரவேற்றார். பேராசிரியர் இரா.மாது, தஞ்சை தமிழ்த் பல்கலை முன்னாள் பதிவாளர் முனைவர் கோவை மணி, சங்கரா கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்டுரையாளர்களும், சங்கரா கல்லூரி மற்றும் சாஸ்திரா பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.