/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஈஞ்சம்பாக்கம் தரைப்பாலம் தடுப்புகளின்றி அபாயம்
/
ஈஞ்சம்பாக்கம் தரைப்பாலம் தடுப்புகளின்றி அபாயம்
ADDED : செப் 09, 2024 11:25 PM
ஈஞ்சம்பாக்கம் : காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், தபாஸ்தியா பார்க் குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஆதிதிராவிட நலத்துறை மாணவியர் விடுதியையொட்டி, மழைநீர் வடிகால்வாய் செல்கிறது.
இக்கால்வாய் குறுக்கே, 16 அடி அகலத்திற்கு தரைப்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக, தபாஸ்தியா பார்க் குடியிருப்புவாசிகள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த தரைப்பாலத்தின் இருபுறமும், தடுப்பு அமைக்கவில்லை. மேலும், மழைநீர் கால்வாய்யோரம் குப்பை கொட்டி சீர்கேடு ஏற்படுத்தி இருப்பதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
எனவே, தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என, தபாஸ்தியா பார்க் குடியிருப்பினர் தெரிவித்தனர்.