ADDED : பிப் 23, 2025 07:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவில் தெரு சேர்ந்த 17 வயது சிறுவன் மாருதி சுசூகி ஈகோ காரை நேற்று காலை 5:00 மணி அளவில், வீட்டின் அருகே இருந்து எடுத்துள்ளார்.
சிறுவனின் கட்டுப்பாட்டை மீறி, தெருவில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சரஸ்வதி, 53. மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. காரின் டயரில் சிக்கிய சரஸ்வதி உடல் நசுங்கி இறந்தார்.
சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி சிறுவனை காஞ்சிபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.