/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிநீர் பயன்படுத்தும் 54 சங்கங்களுக்கு 27ல் தேர்தல்
/
ஏரிநீர் பயன்படுத்தும் 54 சங்கங்களுக்கு 27ல் தேர்தல்
ஏரிநீர் பயன்படுத்தும் 54 சங்கங்களுக்கு 27ல் தேர்தல்
ஏரிநீர் பயன்படுத்தும் 54 சங்கங்களுக்கு 27ல் தேர்தல்
ADDED : மார் 12, 2025 09:20 PM
காஞ்சிபுரம்:நீர்வள துறையின், நீர்வள - நிலவள திட்டத்தின் கீழ், ஏரி நீர் பயன்படுத்தும் விவசாயிகள் மத்தியில், ஏரிநீர் பயன்படுத்துவோர் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கங்களுக்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேந்தெடுக்கும் தேர்தல் நீர்வளத் துறை அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், 105 ஏரிநீர் பாசன சங்க தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், 51 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
மீதமுள்ள 54 சங்கங்களில் போட்டியிட விவசாயிகள் ஆர்வமில்லாததால், ஒத்தி வைக்கப்பட்டது. விடுபட்ட 54 சங்கங்களுக்கான தேர்தல் இம்மாதம் 27ல் நடத்தப்பட உள்ளதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் தாலுகாவில் 22 சங்கங்களும், வாலாஜாபாத் தாலுகாவில் 6 சங்கங்களும், ஸ்ரீபெரும்புதுாரில் 12 சங்கங்களும், உத்திரமேரூரில் 14 சங்கங்கள் என, மொத்தம் 54 சங்கங்களுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு நடக்கிறது.
ஏரிநீர் பாசன சங்க தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை, மாவட்ட அரசு இதழிலும், கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டுள்ளார்.
அந்தந்த தாலுகா அலுவலகங்களில், 17ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதை தொடர்ந்து, 18, 19 ஆகிய தேதிகளில், வேட்புமனு மீது கூர்ந்தாய்வு செய்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதையடுத்து, வேட்புமனு திரும்ப பெறுதல், சின்னம் ஒதுக்கீடு போன்றவை முடிந்து, 27ல், தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும் என, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்