/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருவீதிபள்ளத்தில் சாலையோரம் மண் அணைக்க வலியுறுத்தல்
/
திருவீதிபள்ளத்தில் சாலையோரம் மண் அணைக்க வலியுறுத்தல்
திருவீதிபள்ளத்தில் சாலையோரம் மண் அணைக்க வலியுறுத்தல்
திருவீதிபள்ளத்தில் சாலையோரம் மண் அணைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2024 02:25 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருவீதிபள்ளம் எம்.ஜி.ஆர்., நகரில், சமுதாய கழிப்பறை அமைந்துள்ள தெருவில், சமீபத்தில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.
சாலையின் தரைமட்டத்தைவிட, புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை ஒன்றரை அடி உயரத்திற்குமேல், அமைக்கப்பட்டுஉள்ளதால் சாலையோரம் பள்ளமாக உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில், நிலை தடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையோரம், பள்ளம் உள்ள பகுதியில் மண் அணைக்க, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.