/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 19, 2024 03:57 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு பூந்தோட்ட தெருவில், வீடுகளில் உள்ள வீட்டு உபயோக கழிவு நீர் மற்றும் மழை நீர் வெளியேறும் வகையில் சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் சருகு இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மண் துகள் உள்ளிட்ட கழிவுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் சுகாதா சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பூந்தோட்ட தெருவில் கால்வாயில் மண்டியுள்ள குப்பை குவியலை முழுமையாக அகற்றி, கழிவுநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.