/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முன்னாள் படைவீரர் குறை தீர் கூட்டம்
/
முன்னாள் படைவீரர் குறை தீர் கூட்டம்
ADDED : பிப் 25, 2025 07:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், மார்ச் -1ம் தேதி காலை 10:00 மணிக்கு, முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், தொழில் முனைவோர், வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் ஆகிய திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற உள்ளன. இதில், துறை சார்ந்த உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இதுதவிர, முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோருக்கு, காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில், முன்னாள் படை வீரர்கள் பங்கேற்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.