/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை மனு அளிப்பு
/
முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை மனு அளிப்பு
ADDED : மார் 02, 2025 12:28 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் சிறப்பு குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துடன், தமிழக முதல்வரால் துவக்கப்பட்ட முதல்வரின் காக்கும் கரங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு நடைபெற்றது. முன்னதாக முன்னாள் படைவீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்ற, மருத்துவ முகாமை, கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக, மனவளர்ச்சி குன்றியோருக்கான நிதியுதவி ஒருவருக்கு 21,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் வீட்டு வரி சலுகை ஒருவருக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து முன்னாள் படைவீரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, கலெக்டர் கலைச்செல்வி பெற்றுக் கொண்டார்.
இம்முகாமில், கண் சிகிச்சை, பிசியோதெரபி, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பொது மருத்துவம் போன்ற பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர்கள் வாயிலாக சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.