/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் குளத்தின் கால்வாயை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு
/
கோவில் குளத்தின் கால்வாயை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு
கோவில் குளத்தின் கால்வாயை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு
கோவில் குளத்தின் கால்வாயை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 03, 2024 10:45 PM

காஞ்சிபுரம்:குன்றத்துாரில் பழமை வாய்ந்த திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் ராகு தலமாக விளங்கும் இக்கோவிலில் ஏராளமானோர் வழிபடுகின்றனர்.
இக்கோவிலின் எதிரே, சூர்யபுஷ்கரணி குளம் உள்ளது.
இந்த குளத்தின் நீர்வரத்து கால்வாயில், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்ததால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. தற்போது இந்த கால்வாய்கள் துார்ந்து போய்விட்டன.
இதனால், மழைக்காலத்தில் குளத்திற்கு போதிய நீர்வரத்து இல்லாததால், குளம் நிரம்புவதில்லை.
குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் மழைநீர், குளத்திற்கு செல்லும் வகையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை அமைக்க, ஹிந்து அறநிலையத்துறை அல்லது குன்றத்துார் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.