/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ - வீலரில் இருந்து விழுந்தவர் பலி
/
டூ - வீலரில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : செப் 09, 2024 04:41 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், சிறுகாவேரிப்பாக்கம், ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன், 57. இவர், காஞ்சிபுரத்தில் உள்ள கைத்தறி சில்க்நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி, இரவு 9:30 மணியளவில், காஞ்சிபுரத்திலிருந்து பணி முடித்து, 'யமாஹா ரே'இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
அப்போது, அவரது வீட்டருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தார். இதில், படுகாயமடைந்த இளங்கோவன்,காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக, செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார். பாலுச்செட்டிச்சத்திரம் போலீசில் அவரது மனைவி விஜயா புகார் அளித்துள்ளார்.