/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்கள் நலப்பணியாளரை தாக்கிய பிரபல ரவுடி படப்பை குணா கைது
/
மக்கள் நலப்பணியாளரை தாக்கிய பிரபல ரவுடி படப்பை குணா கைது
மக்கள் நலப்பணியாளரை தாக்கிய பிரபல ரவுடி படப்பை குணா கைது
மக்கள் நலப்பணியாளரை தாக்கிய பிரபல ரவுடி படப்பை குணா கைது
ADDED : மார் 07, 2025 12:58 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குணா என்ற குணசேகரன், 46.
இவர் மீது, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, பாலுார் உள்ளிட்ட காவல் நிலையங்களில், VifI கொலை வழக்கு, 13 கொலை முயற்சி உட்பட 58 வழக்குகள் உள்ளன. நான்கு முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க, என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு காவல் படையினர், தலைமறைவான குணாவை வலை வீசி தேடினர். இதையடுத்து 2023 ஜன., 24ம் தேதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குணா சரணடைந்தார்.
பின், ஜாமினில் வெளியே வந்த அவர், பா.ஜ., வில் இணைந்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.சி., அணி தலைவராக பதவி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2023 டிச., மாதம் குணாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார். அதன்படி, குணா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின், குணா ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி, மதுரமங்கலம் கிராமத்தில் நுாறு நாள் வேலை உறுதி திட்டதின் மக்கள் நலப்பணியாளரான, அதே பகுதியைச் சேர்ந்த மோகன், 59, என்பவரிடம், 'எங்கள் பகுதியில் ஏன் கால்வாய் வெட்டவில்லை' என கூறி தாக்கியுள்ளார்.
பின், இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மோகனை வெட்ட முயன்றுள்ளார். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் மோகன் புகார் அளித்தார். அதன் படி, சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில், குணாவை நேற்று கைது செய்தனர். பின், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அவரை அடைத்தனர்.