/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கம் ஏரி மதகு 'ரிப்பேர்' சீரமைக்க விவசாயிகள் காத்திருப்பு
/
சாலவாக்கம் ஏரி மதகு 'ரிப்பேர்' சீரமைக்க விவசாயிகள் காத்திருப்பு
சாலவாக்கம் ஏரி மதகு 'ரிப்பேர்' சீரமைக்க விவசாயிகள் காத்திருப்பு
சாலவாக்கம் ஏரி மதகு 'ரிப்பேர்' சீரமைக்க விவசாயிகள் காத்திருப்பு
ADDED : செப் 07, 2024 07:02 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ், 350 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் வாயிலாக, 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரியில் உள்ள நான்கு மதகுகளில், முதல் மற்றும் மூன்றாவது மதகுகளில், கடந்த ஆண்டுகளில் ஓட்டை விழுந்தது.
பருவ மழைக்கு ஏரியில் தண்ணீர் சேகரமாகும் போது, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுப்பணித் துறையினர் இணைந்து, சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகள் வைத்து தற்காலிகமாக சரிசெய்தனர்.
எனினும், ஏரி நீர் வெளியேறுவதை முழுதுமாக தடுக்க இயலவில்லை. இதனால், சாகுபடி காலங்களில் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
எனவே, விரைவில் பருவமழை காலம் துவங்க உள்ளதால், ஏரியின் மதகு மற்றும் கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.