/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரமேஸ்வர மங்கலம் ரயில்வே கேட்டில் எச்சரிக்கை ஒலிப்பான் பொருத்தம்
/
பரமேஸ்வர மங்கலம் ரயில்வே கேட்டில் எச்சரிக்கை ஒலிப்பான் பொருத்தம்
பரமேஸ்வர மங்கலம் ரயில்வே கேட்டில் எச்சரிக்கை ஒலிப்பான் பொருத்தம்
பரமேஸ்வர மங்கலம் ரயில்வே கேட்டில் எச்சரிக்கை ஒலிப்பான் பொருத்தம்
ADDED : செப் 01, 2024 01:46 AM

காஞ்சிபுரம்:அரக்கோணத்தில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு ரயில் வழித்தடம் செல்கிறது.
இந்த ரயில் வழித்தடத்தில், பரமேஸ்வரமங்கலம், மஞ்சமேடு, ஆட்டுப்பாக்கம், சேந்தமங்கலம், கோவிந்தவாடி உட்பட பல்வேறு ரயில் கடவுப் பாதைகள் உள்ளன.
இதில், கை சாவி போட்டு, திறந்து மூடும் ரயில்வே கேட் உள்ளன. சில மாதங்களுக்கு முன், கேபிள் புதைக்கும் பணி நடந்து முடிந்துள்ளன. இந்த பணிகளை தொடர்ந்து, ஹைட்ராலிக் கேட்கள் பொருத்தும் பணிகள் சில தினங்களுக்கு முன் நிறைவு பெற்றன. தானியங்கி முறையில், ரயில் கடவுப்பாதை கேட் மூடும் போது, எச்சரிக்கை ஒலிப்பான் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்கிறது.
இருப்பினும், ஹைட்ராலிக் கேட்கள் மூடும் போது, வாகன ஓட்டிகள் கடவுப்பாதை கடக்கும் போது சிக்கினால், விபத்து ஏற்பட நேரிடும் அபாயம் உள்ளது.
எனவே, ஹைட்ராலிக்கேட் மூடும் போது, ரயில் கடவுப்பாதைகளைமுந்த வேண்டாம் என, ரயில்வே துறை எச்சரித்து வருகிறது.