/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கத்திமுனையில் பலாத்கார முயற்சி பழைய குற்றவாளிகள் சிக்கினர்
/
கத்திமுனையில் பலாத்கார முயற்சி பழைய குற்றவாளிகள் சிக்கினர்
கத்திமுனையில் பலாத்கார முயற்சி பழைய குற்றவாளிகள் சிக்கினர்
கத்திமுனையில் பலாத்கார முயற்சி பழைய குற்றவாளிகள் சிக்கினர்
ADDED : பிப் 26, 2025 10:56 PM
காஞ்சிபுரம்,:திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர், வாலாஜாபாத் அருகே உள்ள கிராமத்தில், தோழியுடன் அறை எடுத்து தங்கி பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 23ம் தேதி, தனது அறை அருகே உள்ள கடைக்கு சென்றார். அங்கு வந்த நான்கு இளைஞர்கள், இளம்பெண்ணை கத்தியை காட்டி, அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
இளைஞர்களிடம் இருந்து தப்பிய இளம்பெண், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோனேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கா, 22, சதீஷ்குமார், 25, சந்திரசேகரன், 22, ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான வெங்கடேசன் என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரில், ரங்கா மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

