ADDED : ஏப் 28, 2024 01:29 AM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது பெண்டை கிராமம். இந்த கிராமத்தின் மயானம் அருகே, கஞ்சா பதுக்கி சிலர் விற்பனை செய்வதாக வாலாஜாபாத் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
அதன்படி, அங்கு சென்ற போலீசார், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த நான்கு வாலிபர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் நாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ரசூல் 25, கோகுல்ராஜ் 20, கார்த்திக் 21 மற்றும் ஏகனாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராம் 24 என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, 25 பொட்டலங்களில் அடங்கிய 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததோடு, நால்வரையும் கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகவும், கஞ்சா போதையில் சுற்றித் திரியும் வாலிபர்கள் குறித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

