ADDED : ஜூலை 29, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், ; காஞ்சிபுரம் ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி, பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 68வது கண் மருத்துவ முகாம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. முகாமில், 110 பேர் பங்கேற்றனர்.
இதில், கண்புரை குறைபாடு உள்ள 32 பேர் கண் மருத்துவ நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்டு, விழிலென்ஸ் பொருத்தி, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக, பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
லேசான கண்பார்வை குறைபாடு உள்ள 28 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது என, முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார்.

