/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடிக்கடி தொடரும் மின்வெட்டு வைப்பூரில் மின்சாதனங்கள் பழுது
/
அடிக்கடி தொடரும் மின்வெட்டு வைப்பூரில் மின்சாதனங்கள் பழுது
அடிக்கடி தொடரும் மின்வெட்டு வைப்பூரில் மின்சாதனங்கள் பழுது
அடிக்கடி தொடரும் மின்வெட்டு வைப்பூரில் மின்சாதனங்கள் பழுது
ADDED : ஆக 05, 2024 06:28 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வைப்பூர் கிராமத்தில், தினசரி அடிக்கடி தொடரும் மின்வெட்டால், அப்பகுதியினர் அவதி அடைவதுடன், மின்சாதன பொருள்கள் பழுதாகின்றன.
குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில் 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, ஒரகடம் மின்வாரிய அலுவலகம் வாயிலாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
நிலையில், இங்கு, ஒரு மாதமாக அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 10 முறைக்கும் குறையாமல் மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனால், வீடுகளில் உள்ள டி.வி., மிக்சி, மின்விசிரி, கிரைண்டர், மின்மோட்டார், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகின்றன. இரவு நேரங்களில் குழந்தைகள் வயதானோர் என, அனைவரும் காற்று வசதி இல்லாமல், கொசு கடியில் துாக்கமின்றி தவித்து வருகின்றனர்.
மேலும், தொடரும் மின்வெட்டால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாவில்லை. இதனால், இப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு நாள்தோறும் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள், இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.