/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமையல் கூடங்களுக்கு நிதி ஒதுக்கீடு
/
சமையல் கூடங்களுக்கு நிதி ஒதுக்கீடு
ADDED : மார் 02, 2025 12:25 AM
உத்திரமேரூர், சாலவாக்கம் ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.
இங்கு, மாணவர்களுக்கு உணவு சமைக்க சமையல்கூடம் இல்லாததால், கொட்டகை அமைத்து சமைத்து வந்தனர்.எனவே, புதிய கூடம் அமைக்க பெற்றோர்கோரிக்கை விடுத்துவந்தனர்.
அதன்படி, புதிய சமையல் கூடம் அமைக்க, 2024 --- 25ம் நிதி ஆண்டில், எம்.ஜி.ஆர்., சத்துணவுகூட மேம்பாடு திட்டத்தின்கீழ், 7.56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல, மலையாங்குளம் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், பழுதடைந்த சமையல்கூடத்தை அகற்றி, புதிய சமையல் கூடம் கட்ட, 2024 --- 25ம் நிதி ஆண்டில், எம்.ஜி.ஆர்., சத்துணவு கூட மேம்பாடு திட்டத்தின் கீழ், 7.56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.